Matrimony OTT-Platforms Jobs Coupons Business

crime - 18-03-2020


  • கடலூர் முதுநகரில் மாயமான வாலிபர் கழுத்தை அறுத்து கொலை உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

கடலூர் முதுநகர் சிவானந்தபுரம் கே.வி.ரெட்டி தெருவை சேர்ந்தவர் தினே‌‌ஷ் பெஞ்சமின்.கடந்த 4-ந் தேதி வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்ற அவர், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை.விசாரணையில் அவர்கள் நெய்வேலி மற்றும் காரைக்காடு பகுதியை சேர்ந்த 5 பேருடன் சேர்ந்து ஜெய்வின் ஜோசப்பின் கழுத்தை அறுத்து கொலை செய்து, உடலை உப்பனாறு அருகே புதைத்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய், பிரபா ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர் ஜெய்வின் ஜோசப்பின் உடலை புதைத்ததாக விஜய், பிரபா ஆகியோர் கூறிய இடத்தில் தோண்டி, உடலை எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர். அதன்படி விஜய், பிரபா ஆகியோரை காரைக்காடு உப்பனாறு பகுதிக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் கூறிய இடத்தில் கடலூர் தாசில்தார் செல்வகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி முன்னிலையில் ஜெய்வின் ஜோசப்பின் உடலை தோண்டி எடுத்தனர். பின்னர் அங்கேயே மருத்துவ குழுவினர் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அதன் பிறகு அங்கேயே மீண்டும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.



  • நெல்லையில் தனியார் நிதி நிறுவன மேலாளருக்கு கத்திக்குத்துவாலிபர் கைது
நெல்லை மேலப்பாளையம் ராஜாநகரை சேர்ந்தவர் இசக்கிபாண்டி (வயது 26). இவர், ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்தார். இந்த நிதி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதால், அந்த நிறுவனம் மூடப்பட்டது. இது தொடர்பாக உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த நிலையில் 5 பேர் கொண்ட கும்பல் இசக்கிபாண்டி வீட்டுக்கு வந்தது. அவர்கள் நிதி நிறுவன உரிமையாளர் இருப்பிடம் கேட்டு விசாரித்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், இசக்கி பாண்டியை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றது. தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள், இசக்கி பாண்டியை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.



  • ஈரோட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவர் கைது
ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 70). அந்த பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியிடம் அவர் நன்றாக பழகி வந்தார். இதனால் அந்த தம்பதியின் 9 வயது மகள், மாரியப்பன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். அந்த சிறுமி 3-ம் வகுப்பு படித்து வருகிறாள்.பள்ளிக்கூடம் விடுமுறையில் பெற்றோர் வேலைக்கு சென்றபோது, சிறுமியை மாரியப்பனின் வீட்டில் விட்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்தநிலையில் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் நேற்று முன்தினம் சிறுமியை அவளது பெற்றோர் மாரியப்பனிடம் விட்டு வேலைக்கு சென்றுள்ளனர்.மாலையில் அவர்கள் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தனர். அப்போது சிறுமி சோர்வடைந்த நிலையில் காணப்பட்டாள். இதனால் அவளிடம் பெற்றோர் கேட்டபோது, மாரியப்பன் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக சிறுமி அழுது கொண்டே கூறினாள்.இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை நேற்று கைது செய்தனர்.


  • சிறுவனை கடத்திக் கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை ஓசூர் கோர்ட்டு தீர்ப்பு









கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் மசூதி தெருவை சேர்ந்தவர் சாதிக்பாஷா (வயது 38). இவரது மகன் இஸ்மாயில் (9). சாதிக்பாஷாவின் சோடா கம்பெனியில், கெலமங்கலம் விருப்பாச்சி கோவில் தெருவை சேர்ந்த பாபு என்பவரின் மகன் அல்டாப் (30) என்பவர் வேலை செய்து வந்தார்.இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ந் தேதி வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் இஸ்மாயில் மாயமானான். விசாரணையில் சோடா கம்பெனியில் வேலை செய்து வந்த அல்டாப் ஒரு லட்சம் ரூபாய்க்காக சிறுவனை கடத்தி சென்றதும், பணம் கொடுக்காததால், கெலமங்கலத்தை அடுத்த பேவநத்தம் மலையில் இருந்து கீழே தள்ளி சிறுவன் இஸ்மாயிலை கொலை செய்ததும் தெரியவந்தது.இந்த கொலை தொடர்பாக கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அல்டாப்பை கைது செய்தனர்.இந்நிலையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அல்டாப் தலைமறைவானார். 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அல்டாப்பை கடந்த ஆண்டு அக்டோபரில் தனிப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


  • ஆர்.எஸ்.மங்கலம் அருகே நகைக்காக பெண் கொலை

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள ஓடக்கரை கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காஞ்சனா(வயது 39).இவர்களுக்கு அபிநயா(19), ஹரிகரன்(16) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் விறகு பொறுக்குவதற்காக காஞ்சனா ஊரின் அருகே கருவேல மரம் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார்.ஆனால் மாலை 6 மணி வரை அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை தேடிப்பார்த்துள்ளனர். அப்போது காட்டுப்பகுதியில் காஞ்சனா கழுத்தில் சேலை இறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். மேலும் அவர் அணிந்திருந்த 6 பவுன் நகையையும் காணவில்லை. இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேசுவரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து காஞ்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.



  • மாணவிக்கு பாலியல் தொந்தரவு: வேலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி நூலகர் பணியிடை நீக்கம்

வேலூர் தொரப்பாடியில் தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இங்கு வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியின் நூலகராக தாமோதரன் (வயது 55) பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2-ம் ஆண்டு படிக்கும் மாணவியை நூலகத்தில் புத்தகங்கள் அடுக்கி வைக்க உதவிக்கு வரும்படி கூறி உள்ளார்.
அந்த மாணவி நூலகத்துக்குள் சென்றவுடன் தாமோதரன் கதவை பூட்டி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. அதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அங்கிருந்து வெளியேற முயன்றுள்ளார். அப்போது தாமோதரன், இதுகுறித்து வெளியே தெரிவிக்க கூடாது என்று மாணவியை மிரட்டி அனுப்பி உள்ளார்.வகுப்பறைக்கு வந்த மாணவி நடந்த சம்பவத்தை சக மாணவிகளிடம் கூறி கதறி அழுதுள்ளார். அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால் நூலகர் மீது நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மாணவர்கள் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனாலும் நூலகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் நேற்று காலை கல்லூரியின் முன்பாக திரண்டனர்.அவர்கள் தொரப்பாடி-பாகாயம் சாலையில் திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பாகாயம் போலீசார் மறியலில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரிக்குள் அழைத்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நூலகரை பணியிடை நீக்கம் செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் போலீசார், கல்லூரி நிர்வாகத்திடம் பேசினர்.அதைத்தொடர்ந்து சிறிதுநேரத்தில் நூலகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கல்லூரி தகவல் பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.ஆனால் நூலகரை கைது செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதற்கிடையே நூலகர் தாமோதரன் மீது கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் பேரில் மாலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


  • போளூர் அருகே சொத்து தகராறில் வாலிபரை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை; அண்ணன்-தம்பிக்கு 2 ஆண்டு கடுங்காவல்
போளூர் தாலுகா சனிக்காவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் மார்க்கபந்து (வயது 30). இவரது குடும்பத்துக்கும், மட்டப்பிறையூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகன் தொழிலாளியான சந்திரசேகர் என்பவரின் குடும்பத்திற்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது.இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ந் தேதி மார்க்கபந்துவின் தம்பி தமிழ்ச்செல்வன் (18) சனிக்காவாடியை சேர்ந்த பிச்சாண்டி என்பவரின் நிலத்தில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த சந்திரசேகர் (31) மற்றும் அவரது உறவினர்களான மட்டப்பிறையூரை சேர்ந்த மண்ணு என்பவரின் மகன்கள் செல்வகுமார் (40), மோகன் (29) ஆகியோர் கம்பு மற்றும் இரும்பு ராடால் தமிழ்ச்செல்வனை தாக்கி உள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திருமகள் தீர்ப்பு கூறினார். இதில் தமிழ்ச்செல்வனை அடித்து கொலை செய்த குற்றத்திற்காக சந்திரசேகருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் அபராத தொகையை கட்டத்தவறினால் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.அதேபோல் செல்வகுமாருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும், மோகனுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் அவர்கள் அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஒரு மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


  • நகை திருட்டு வழக்கில் போலீசார் விசாரித்ததால் சிறுமிக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை நெல்லை அருகே பரிதாபம்
நெல்லை அருகே சீதபற்பநல்லூரை அடுத்த வல்லவன்கோட்டை நடு தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருடைய மனைவி ஆவுடைதங்கம் (வயது 32).அதே ஊரில் புளியமரத்து தெருவில் வசித்தவர் திருமலை முருகன் மனைவி வள்ளியம்மாள் (33). இவருடைய மகள் மகராசி (8). இவள், அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 3–ம் வகுப்பு படித்து வந்தாள்.ஆவுடையம்மாளும், வள்ளியம்மாளும் தோழிகள் ஆவர். திருமலை முருகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் வள்ளியம்மாள் கூலி வேலைக்கு சென்று, தன்னுடைய மகளை வளர்த்து வந்தார்.இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆவுடைதங்கத்தின் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 6 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது. பீரோவின் பூட்டை உடைக்காமல், சாவியால் பீரோவை திறந்து நகைகளை மர்மநபர் திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், சீதபற்பநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர்.ஆவுடைதங்கத்தின் வீட்டில் பீரோவின் சாவி வைக்கப்பட்டு இருந்த இடத்தை நன்கு தெரிந்த நபரே நகைளை திருடி இருக்கலாம் என்று போலீசார் கருதினர். எனவே ஆவுடைதங்கத்தின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் உறவினர்கள், தோழிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.இதுதொடர்பாக வள்ளியம்மாளிடம் விசாரிப்பதற்காக, அவரை சீதபற்பநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு வருமாறு போலீசார் அழைத்தனர். இதனால் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் வள்ளியம்மாளை அவருடைய உறவினரான தெய்வேந்திரன் ஆலங்குளம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார். பின்னர் இரவு 10.30 மணி அளவில் வள்ளியம்மாளிடம் விசாரணை நடத்தி முடித்த போலீசார் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.நகை திருட்டு வழக்கு தொடர்பாக தன்னிடம் போலீசார் விசாரணை நடத்தியதால் வள்ளியம்மாள் மனமுடைந்த நிலையில் இருந்தார். இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தனக்கு பிறகு தன்னுடைய குழந்தை அனாதையாகி விடும் என்று கருதியதால், மனதை கல்லாக்கி கொண்டு தன்னுடைய மகள் மகராசியை கொலை செய்து விட்டு, பின்னர் தானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கருதினார்.அதன்படி அவர், வீட்டில் தூங்கி கொண்டிருந்த மகள் மகராசிக்கு பூச்சிக்கொல்லி மருந்தை குடிக்க கொடுத்தார். இதனால் அதனை குடித்த மகராசி சிறிதுநேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தாள். பின்னர் வள்ளியம்மாளும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார்.நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் வள்ளியம்மாளின் வீட்டின் கதவு திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது மகராசி இறந்து கிடந்ததையும், வள்ளியம்மாள் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடியவாறு கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே வள்ளியம்மாளை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்ததும், சீதபற்பநல்லூர் போலீசார் விரைந்து சென்று, இறந்த மகராசியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


  • விழுப்புரம் அருகே பஸ் டிரைவர் கழுத்தை இறுக்கி கொலை கள்ளக்காதலனுடன் மனைவி கைது
விழுப்புரம் அருகே உள்ள வி.அரியலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜகுமாரன் (வயது 35), தனியார் பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். வேலை இல்லாத சமயத்தில் விழுப்புரம் ஆவின் நிறுவனத்தில் கார் ஓட்டி வந்தார்.இவர் திருமணத்திற்கு பிறகு கடந்த 5 ஆண்டுகளாக விழுப்புரம் தந்தை பெரியார் நகரில் ஒரு வாடகை வீட்டில் மனைவி லதா (27), மகள் சங்கவியுடன் (6) வசித்து வந்தார்.ராஜகுமாரன், ஆவின் நிறுவனத்தில் கார் ஓட்டி வந்தபோது அவருக்கும் அங்கு ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் விழுப்புரம் வழுதரெட்டியை சேர்ந்த முனியன் மகன் ரஞ்சித் (25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இதன் அடிப்படையில் ராஜகுமாரன் வீட்டிற்கு ரஞ்சித் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் ரஞ்சித்துக்கும், லதாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.இந்த விவரம் வீட்டின் உரிமையாளருக்கு தெரியவரவே அவர்கள், ராஜகுமாரன் குடும்பத்தினரை வீட்டை விட்டு காலி செய்து விட்டனர். அதன் பிறகு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ராஜகுமாரன் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான வி.அரியலூரில் குடியேறினார்.இந்நிலையில் நேற்று காலை ராஜகுமாரன் தனது வீட்டில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக லதா, அக்கம், பக்கத்தில் உள்ள பொதுமக்களிடம் கூறினார். இதுபற்றி விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகேசன், சப்-இன்ஸ்பெக்டர் பிரகா‌‌ஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜகுமாரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் ராஜகுமாரனின் கழுத்துப்பகுதி இறுக்கப்பட்ட நிலையில் இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் அவரது மனைவி லதா மற்றும் அக்கம், பக்கத்தில் உள்ள பொதுமக்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது லதா முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவரிடம் போலீசார், ‘கிடுக்கிப்பிடி’ விசாரணை நடத்தினர். விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ராஜகுமாரனை தானும், ரஞ்சித்தும் சேர்ந்து கழுத்தை இறுக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.இதனை தொடர்ந்து லதாவையும், அவர் கொடுத்த தகவலின்பேரில் ரஞ்சித்தையும் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் இருவரையும் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad