Corona தடுப்பு நடவடிக்கை மழலையர் பள்ளிகளுக்கு LKG முதல் 5ஆம் வகுப்பு வரை மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை - முதலமைச்சர்
தமிழகத்தில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகளுக்கும் மற்றும் துவக்கப் பள்ளிகளுக்கும், LKG முதல் 5ஆம் வகுப்பு வரை மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
Corona தடுப்பு பணிகளில் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக, தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்புபவர்களை இரண்டு வாரம் தனிமைப்படுத்தி கண்காணிக்க ஏற்பாடு செய்யுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் இருந்தால், அவர்கள் வருவதை தடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
Corona தடுப்பு பணிகளில் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக, தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்புபவர்களை இரண்டு வாரம் தனிமைப்படுத்தி கண்காணிக்க ஏற்பாடு செய்யுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Corona வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக 60 கோடி ரூபாய் நிதி உடனடியாக ஒதுக்கவும், தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தேனி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 11 எல்லையோர மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளையும், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களை மார்ச் 31ஆம் தேதி வரை மூடவும் தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள், ஆன்மிக ஸ்தலங்களில் தூய்மைப் பணியை தீவிரப்படுத்தவும் தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிகளவில் கூடுவதையும், அடுத்த 15 நாட்களுக்கு தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.