corona - 18-03-2020
கொரோனா பீதி எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 38 விமானங்கள் ரத்து
விமானங்களில் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்ற பீதியால் விமானங்களில் பயணம் செய்யபவர்களின் எண்ணிக்கை குறைந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நம்நாட்டில் ஏப்ரல் 14-ந் தேதி வரை வெளிநாட்டு பயணிகளுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்து உள்ளது.கொரோனா வைரஸ் காரணமாக பயணிகளின் வரத்து குறைவால் குவைத் மற்றும் இலங்கையில் இருந்து வர வேண்டிய தலா 3 விமானங்கள், மலேசியா, தாய்லாந்தில் இருந்து தலா 2 விமானங்கள், தோகா, சிங்கப்பூர், ரியாத், துபாய், மஸ்கட் ஆகிய இடங்களில் இருந்து வர வேண்டிய மொத்தம் 15 விமானங்களும், அதுப்போல் சென்னையில் இருந்து மேற்கண்ட நாடுகளுக்கு செல்ல வேண்டிய 15 விமானங்களும் என 30 பன்னாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளன.அதுப்போல் சென்னையில் இருந்து ஐதராபாத், பெங்களூரூ, கொச்சி நகரங்களுக்கு சென்றுவிட்டு திரும்பி வர வேண்டிய 8 விமான சேவையும் ரத்து செய்யப்பட்டது.
போதிய பயணிகள் இல்லாததால் விமானங்களின் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு நிலையம் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: நீலகிரியில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், பைக்காரா படகு இல்லம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று (அதாவது நேற்று) முதல் வருகிற 31-ந் தேதி வரை மூடப்படுகிறது. கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதால், வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருவதை கட்டுப்படுத்தவும், சோதனைச்சாவடிகளில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊட்டி மலை ரெயில் தற்காலிகமாக 31-ந் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மார்க்கெட்டுகளில் உள்ள கடை உரிமையாளர்கள் தங்களது கடையினை சுற்றி, கிருமி நாசினியை கொண்டு, நாளொன்றுக்கு 5 முறை சுத்தம் செய்ய வேண்டும். கடையின் முன்பாக கைகளை கழுவுவதற்கு சோப்பு தண்ணீர் வைக்கப்பட வேண்டும்.நீலகிரியில் அனைத்து சுற்றுலா தலங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் மூடப்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. தங்கும் விடுதிகளில் உள்ள சுற்றுலா பயணிகள் உடனடியாக காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் தங்கி இருந்தால், அவர்கள் காலி செய்ய வேண்டும் என்று கூறி சம்பந்தப்பட்ட வெளிநாட்டு தூதரகத்துக்கு தெரிவிக்கும்படி கூற வேண்டும். இந்த உத்தரவை மீறும் தங்கும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சீல் வைக்கப்படும்.
‘மலைகளின் இளவரசி’ யான கொடைக்கானல் பகுதியில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சுற்றுலா இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அத்துடன் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அப்போது அங்குள்ள ஓட்டல், தங்கும் விடுதிகளில் வெளிநாடு மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த 18-க்கும் மேற்பட்டவர்கள் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு தங்கியிருந்த சுற்றுலா பயணிகளை அதிகாரிகள் வெளியேற்றினர். மேலும் தங்கும் விடுதிகள், ஓட்டல்களையும் மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில் ‘கொடைக்கானல் நகரில் உள்ள ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள், சுற்றுலா இடங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு உணவு, தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் நகருக்கு வருகை தருவதை தவிர்க்க வேண்டும்’ என்றனர்.இந்தநிலையில் கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் வெளிநாடு மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் தங்கி இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆர்.டி.ஓ. (பொறுப்பு) சிவக்குமார், நகராட்சி ஆணையர் நாராயணன், தாசில்தார் வில்சன், சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜா தலைமையிலான குழுவினர் அங்கு சென்று சோதனை செய்தனர்.