காவிரியில் தமிழகத்துக்கான குரல்... கமல் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது
காவிரியின் தமிழகத்துக்கான குரல் என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் இன்று சென்னையில் தொடங்கியது. காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வரைவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அது தமிழகத்துக்கு சாதகமாக இல்லை என்பதால் தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கு எதிராக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கமல்ஹாசனும் இன்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட திட்டமிட்டிருந்தார். அதன்படி சென்னையில் தி.நகரில் அதற்கான கூட்டம் கமல் தலைமையில் கூடியுள்ளது. இதில் காவிரியில் தமிழகத்துக்கான குரல் என்ற தலைப்பில் விவாதிக்கப்படவுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அனைத்து கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தை நான் நடத்தவில்லை என்றும் இது விவசாயிகளுக்கான கூட்டம் என்றும் கமல் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த கூட்டத்தில் நாங்கள் பங்கேற்க போவதில்லை என்று ஸ்டாலின் தெரிவித்தார். தி.மு.க. தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டிருந்தாலும், அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன் நான் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசியபோது, கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய தேவையில்லை என்று அனைவரும் தெரிவித்து இருக்கின்றனர். எனவே, தி.மு.க. உள்ளிட்ட 9 கட்சிகளும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறோம் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த கூட்டத்தில் அய்யாக்கண்ணு, நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.