சட்டமன்றத்தில் கேள்வி கேட்க எதிர்க்கட்சிகள் இல்லை என மெத்தனம் வேண்டாம்... நாங்க இருக்கோம்.. கமல்
கேள்விகள் கேட்பதற்கு சட்டமன்றத்தின் உள்ளே எதிர்க்கட்சி இல்லை என்ற மெத்தனத்துடன் ஆளுங்கட்சி இருந்திட வேண்டாம். மக்கள் நீதி மய்யம், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, தொடர்ந்து கேள்விகளை எழுப்பிக்கொண்டேயிருக்கும் என்று கமல் தெரிவித்துள்ளார். சட்டசபையின் 2-ஆவது கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆரம்பமே கண்டனம், வெளிநடப்பு என அமர்க்களமாக இருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகும் வரை கூட்டத் தொடரில் பங்கேற்க மாட்டோம் என்று திமுக கூறிவிட்டது.
இந்நிலையில் நாளை பள்ளிக் கல்வித் துறை மற்றும் உயர் கல்வித் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. திமுக சட்டசபைக்கு வராது என அறிவித்து விட்டதால் இந்த விவாதத்தில் பங்கேற்று கேள்வி கேட்க எதிர்க்கட்சிகளே இல்லை என ஆளும் கட்சி மெத்தனம் கொள்ள வேண்டாம். நாங்கள் இருக்கிறோம்.