கமல் கட்சியை பதிவு செய்வதில் யாருக்கேனும் ஆட்சேபணை இருக்கா... 31-க்குள்ள சொல்லுங்க... தேர்தல் ஆணையம்
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தை கட்சியாக பதிவு செய்ய யாருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் வரும் 31-ஆம் தேதிக்குள் தெரியப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த பல மாதங்களாக அரசியலுக்கு வரப்போவதாகவும் தமிழக அரசை குறை கூறியும் இருந்த கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். அக்கட்சிக்கு இணைந்த கைகள் கொண்ட சின்னத்தையும் கொடியையும் வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து இந்த கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய கடந்த மார்ச் மாதம் விண்ணப்பிக்கப்பட்டது. அதுகுறித்து விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் பரிசீலனைக்கு ஏற்றது. மேலும் கமல் கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்ய யாருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் அவர்கள் மே 31-ஆம் தேதிக்குள் தெரியப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மக்கள் நீதி மய்யம் தொடர்பாக செய்தித்தாள்களில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.