கவுதமிக்கு சம்பள பாக்கியிருந்தால் கம்பெனி வழங்கும்.. கமல் நறுக் பேட்டி
சென்னை: கவுதமிக்கு சம்பள பாக்கி இருந்தால் ராஜ்கமல் இன்டர் நேஷனல் நிறுவனம் வழங்கும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார். ஸ்ரீதேவியின் மரணத்தை அடுத்து அவர்களது குடும்பத்தாரிடம் ஆறுதல் சொல்வதற்காக நேற்றைய தினம் மும்பை சென்றிருந்தார். அங்கு ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு இன்று சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் கமல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தசாவதாரம், விஸ்வரூபம் உள்ளிட்ட படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்த தனக்கு கமல் ஊதியத்தை வழங்கவில்லை என்றும் அது தனது வாழ்க்கைக்கு முக்கியமாக தேவைப்படுவதாகவும் கவுதமி டுவிட்டரில் புகார் அளித்தது குறித்து கமலிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் எனக்கும் அவருக்கும் எந்த உறவும் இல்லை என்று கவுதமி கூறுவது சரிதான். சம்பள பாக்கி இருப்பது உண்மையாக இருந்தால் அதை கம்பெனி அவருக்கு வழங்கும். அதற்கென அங்கு அதிகாரிகள் உள்ளனர். அந்த விவகாரத்தை அவர்கள் பார்த்துக் கொள்வர் என்றார். மேலும் செம்மரக் கடத்தல் கும்பலிடம் தமிழர்கள் சிக்காமல் இருக்க விழிப்புணர்வு தேவை என்றும் கமல் வலியுறுத்தியுள்ளார்.