விஜய்யை அசத்திய இரட்டையர்கள்.. முருகதாஸின் ஷூட்டிங் சென்டிமென்ட்
சென்னை : ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'விஜய் 62' படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது. சென்னை ஷெட்யூல் முடிவடைந்ததை தொடர்ந்து இப்போது கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. 'கத்தி' படத்தின் ஷூட்டிங் நடந்த இடங்களில் சென்டிமென்டிற்காக சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தி விட்டு பின்னர் வேறு பகுதியில் படப்பிடிப்பு நடத்துகிறாராம் முருகதாஸ்.
கொல்கத்தாவில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு 20 நாட்கள் நடைபெற உள்ளதாம். கொல்கத்தாவில் இப்போது நடந்து வரும் படப்பிடிப்பில் விஜய் சம்பந்தப்பட்ட அதிரடி ஆக்ஷன் காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.
தெலுங்கு படவுலகில் பிரபல ஸ்டன்ட் மாஸ்டர்களாக விளங்கும் ராம், லக்ஷமண் என்ற இரட்டையர்கள் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். ராம் - லக்ஷ்மண் இணைந்து சண்டைக்காட்சிகளைப் படமாக்கி வருகின்றனர்.
இந்த இரட்டையர்கள் விஜய் நடிக்கும் படத்தில் இணைந்து பணியாற்றுவது இது தான் முதல் முறை. எனவே தங்களுடைய முழுத்திறமையைக்காட்டும் வகையில் சண்டைக்காட்சிகளை எடுத்து வருகின்றனர். ராம் லக்ஷ்மண் திறமையைப்பார்த்து விஜய்யே அசந்துபோயிருப்பதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.