இன்னும் முடியாத ஸ்ட்ரைக்... தீபாவளிக்கு ரிலீசாகுமா அஜித், விஜய், சூர்யா படங்கள்?
இந்த ஆண்டு தீபாவளிக்கு அஜித், விஜய், சூர்யா என்று மூன்று டாப் ஹீரோக்களும் மோதும் சூழ்நிலை ஏற்பட்டது. ஸ்ட்ரைக்கால் அது நடக்க வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. அஜித், விஜய், சூர்யா ஆகிய மூன்று ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது அபூர்வமான ஒன்று. இந்த ஆண்டு விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படம், அஜித் - சிவா கூட்டணியில் உருவாகும் விஸ்வாசம், சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் உருவாகி இருக்கும் என் ஜி கே ஆகியவை தீபாவளி அன்று வருவதாக அறிவிக்கப்பட்டன.
இவற்றில் விஜய் படம் துவங்கப்பட்டு சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடந்தது. அஜித் நடிக்கும் படம் இன்னும் ஆரம்பிக்கப்படவே இல்லை. சூர்யாவின் என் ஜி கே படமும் சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு முடிந்த நிலையில் நிற்கிறது. இவற்றில் விஜய் படம் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் த்ரில்லராகவும், அஜித் படம் குடும்ப செண்டிமெண்டுடன் கூடிய கமர்ஷியல் படமாகவும், சூர்யா படம் கேங்ஸ்டெர் படமாகவும் தயாராகின்றன. இந்த மூன்று படங்களும் முழுமையாக உருவாக குறைந்தது நான்கு மாதங்களாவது தேவைப்படும். ஸ்ட்ரைக் இழுத்துக்கொண்டே போவதால் ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கினாலும் படங்கள் தீபாவளிக்குள் தயாராவது சந்தேகமே... ஸ்ட்ரைக் முடிந்த பிறகு ரிலீஸுக்கு தயாராகி ஸ்ட்ரைக்கால் நிற்கும் படங்களுக்கு தான் வரிசையாக முன்னுரிமை தரப்படும். எனவே இந்த மூன்று படங்களுமே தீபாவளிக்கு ரிலீஸ் ஆவது சந்தேகம் தான் என்கிறது சினிமா வட்டாரங்கள்.