விமர்சனத்தை எதிர்கொள்ளும் நேர்மையோ துணிச்சலோ இல்லாத அரசு: கமல் காட்டம்
விமர்சனத்தை எதிர்கொள்ளும் நேர்மையோ துணிச்சலோ இல்லாத தமிழக அரசு என்று கமல்ஹாசன் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். தமிழக அரசு குறித்து ஒரு டுவிட்டர் பதிவை மேற்கோள் காட்டி கமல் விமர்சனம் செய்துள்ளார். அந்த பதிவில் அரசை விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர்களின் பேட்டிகளை ஒளிபரப்பும் செய்தித் தொலைக்காட்சிகளை அரசு கேபிளில் இருந்து நீக்கும் நடவடிக்கையை எடப்பாடி அரசு கையாண்டு வருகிறது. செய்தி தொலைக்காட்சிகள் மிரட்டலுக்கு பயந்து எடப்பாடி நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்து வருகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை மேற்கோள் காட்டி கமல்ஹாசன் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதவில் அவர் கூறுகையில் விமர்சனத்தை எதிர்கொள்ளும் நேர்மையோ துணிச்சலோ இல்லாத அரசு சரித்திரத்திலும் ஏன், நினைவிலும்கூட நிலைக்க வாய்ப்பில்லை. இன்றைய அரசியலின் இந்த இழிநிலையை மாற்றுவதும் மக்கள் நீதி மய்யத்தின் இலட்சியங்களில் ஒன்று என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் கமல். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்திலும் மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.