நெடுவாசல் செல்கிறார் கமல்.. ஏப்ரல் 4ம் தேதி திருச்சியில் பிரமாண்ட பொதுக்கூட்டம்!
சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் கட்சியின் நிறுவன தலைவர் கமல்ஹாசன் ஏப்ரல் 4ஆம் தேதி திருச்சியில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். கட்சி தொடங்கிய பின்னர் அவர் மேற்கொள்ளும் முதல் அரசியல் பயணமாகும். ராமேஸ்வரத்தில் அரசியல் பயணத்தை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சியை கடந்த 21ஆம் மதுரையில் தொடங்கினார். கட்சியின் கொடியையும் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து வைத்தார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், 'கிராமியமே எங்கள் தேசியம்' என்று அறிவித்து இருப்பதால் அதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டு இருக்கிறோம் என்று கூறினார்.
அடுத்த மாதம் திட்டமிட்டபடி சிவகங்கை, திண்டுக்கல், பரமக்குடி அருகே ஒரு ஊர் என சில ஊர்களுக்கு செல்லும் பணி தொடரும். மதுரையில் நடந்ததுபோல் அடுத்த கூட்டம் ஏப்ரல் 4ஆம் தேதி திருச்சியிலும் நடத்த திட்டமிட்டு உள்ளோம் என்றார்.
கட்சி தொடங்கியதில் மகிழ்ச்சி நான் விதைதான். மரபணு மாற்றப்பட்டது என விஞ்ஞானம் பேசி இருக்கிறார்கள். அதுபற்றி எனக்கு தெரியவில்லை. அதுபற்றி இப்போது பேச வேண்டாம். கட்சியை தொடங்கி இருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் கட்சி நிர்வாகிகளுடன் இன்று கமல் ஆலோசனை நடத்தினார். மக்கள் நீதி மய்யத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவித்தன. அடுத்த கட்ட பயணம் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
புதுக்கோட்டை செல்லும் கமல் நெடுவாசல் கிராம மக்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமேஸ்வரத்தில் மீனவர்களை சந்தித்து குறைகளைக் கேட்ட கமல்ஹாசன், நெடுவாசலில் விவசாயிகளை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஏப்ரல் 4ல் திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களுக்கு கமல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சி பெயரை அறிவித்த பின்னர் கமல் மேற்கொள்ளும் முதல் அரசியல் சுற்றுப்பயணம் இதுவாகும்.