ஏப்ரல் 1-ல் கமல் தூத்துக்குடி வருகை.. எப்படி அனுமதிப்பது.. டென்ஷனில் போலீஸ்!
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்களை சந்திக்க கமல் வரும் 1-ம் தேதி தூத்துக்குடிக்கு வருவதாக அவர் கூறியுள்ள நிலையில் அவரை போலீஸார் அனுமதிப்பதா அல்லது தடை விதிப்பதா என்பது குறித்து யோசனையில் உள்ளனர். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி குமாராரெட்டிபாளையம் பகுதி மக்கள் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்து வரும் நிலையில் மக்கள் விரும்பினால் மக்கள் நீதிமய்யத்தின் சார்பில் நானும் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தர தயார் என்று கமலஹாசன் அறிவித்தார். இதை ஏற்று சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற போராட்ட குழுவினர் அவரை போராட்டத்தில் பங்கேற்ற அழைப்பு விடுத்தனர். இதையடுத்து ஏப்ரல் 1ம் தேதி தூத்துக்குடிக்கு கமலஹாசன் வருவதாக அறிவித்துள்ளார். தூத்துக்குடி குமாரரெட்டிபாளையம் மக்களை சந்தித்து ஆதரவு தெரிவிக்க வரும் கமலஹாசனுக்கு வாகைகுளம் விமான நிலையத்தில் ஏப்ரல் 1-ம் தேதி காலை மக்கள் நீதி மய்யம் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் என்றும், அதில் நிர்வாகிகள் உள்ளிட்ட தொண்டர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட பொறுப்பாளர் சேகர் கேட்டு கொண்டுள்ளார். இந்நிலையில் இதற்கு அனுமதிக்க கொடுக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து போலீஸைர் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.