நல்லகண்ணு, ரஜினி, கருணாநிதி வரிசையில் விஜயகாந்துடன் கமல் சந்திப்பு
சென்னை: நல்லக்கண்ணு, ரஜினி, கருணாநிதியை தொடர்ந்து தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை கமல்ஹாசன் இன்று அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்து பேசுகிறார். ராமேஸ்வரத்தில் நாளைமறுநாள் தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன். மேலும் அன்றைய தினம் மாலை மதுரையில் பொதுக் கூட்டமும் நடைபெறுகிறது.
இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லக்கண்ணுவை சந்தித்தார். பின்னர் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டுக்கு நேற்றைய தினம் சென்ற கமல் அவரை சந்தித்து பொதுக் கூட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் கமல் சந்தித்து வருகிறார். ரஜினியை சந்தித்தபோது கமல் கூறுகையில் அரசியல் பயணம் தொடங்குவதற்கு முன்னர் எனக்கு பிடித்தவர்களிடம் சென்று சொல்லிவிட்டு வருவதாக தெரிவித்திருந்தார். ரஜினியை நட்பு ரீதியில் சந்தித்ததாக கூறிய கமல், கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தாக தெரிவித்தார்.
ரஜினியை நட்பு ரீதியில் சந்தித்ததாக கூறிய கமல், கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தாக தெரிவித்தார்.