கருப்பு.. காவி.. கமல் கொள்கை என்னவாக இருக்கும்?
கமல் கொள்கை என்னவாக இருக்கும்?- வீடியோ சென்னை: கமல்ஹாசன் தன்னுடைய அரசியல் கொள்கை என்ன என்று நாளை தெரிவிப்பேன் என்று கூறி இருக்கிறார். அவருடைய அரசியல் பாதை என்னவென்று அவரது ரசிகர்களுக்கு கூட தெரியாமல் இருக்கிறது. ரஜினி கட்சி அறிவிப்பு வெளியிட்ட அன்றே ஆன்மீக அரசியல் என்று புதிய வழிமுறையை கூறினார். ஆனால் கமல் என்ன செய்ய போகிறார் என்று சொல்லாமல் எல்லோரையும் ஒரு ஊகத்திலேயே வைத்திருக்கிறார்.
கட்சியின், பெயர், கொடி, மாநாடு என எல்லாமும் நாளை அறிவிக்கப்பட இருக்கிறது. இதில் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
காவி கருப்பு கமலின் கொள்கை குறித்து பெரும் எதிர்பார்ப்பு உள்ளது சில நாட்களுக்கு முன் இவர் கருப்புக்குள் காவி அடங்கும் என்று பேசினார். இடது சாரி, வலது சாரி, நடுநிலையாளர்கள் என எல்லா பக்கமும் இந்த ஒரு வாசகத்தால் குழம்பி போனார்கள். இவர் கொள்கை என்ன என்ற எதிர்பார்ப்பு எகிறியது.
மாற்றம் ஆனால் சில நாளிலேயே காவிக்கு எதிராக பேசினார். ரஜினியிடம் 'காவி' இருக்கிறது என்று குண்டை போட்டார். அவரிடம் இருந்து அந்த கொள்கை மறைந்தால்தான் கூட்டணி வைப்பேன் என்றார். ஆனால் ''தன் கருப்புக்குள் இருக்கும் காவி'' திடீர் என்று எங்கே சென்றது என்று கூறவேயில்லை.
அடுத்தடுத்து சந்திப்பு கமல் இன்னும் அரசியல் பற்றி பேச புடினையும், டிரம்பையும்தான் சந்திக்கவில்லை. அந்த அளவிற்கு தமிழகத்தில் எல்லா கட்சிகளையும் சந்தித்துவிட்டார். சீமானை பார்க்கும் அவர் திமுகவையும் பார்க்கிறார், கம்யூனிஸ்ட்டையும் சந்திக்கிறார். முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷனுடனும் பேசுகிறார்.
எதிர்க்கட்சி இந்த நிலையில் அவர் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி போல செயல்பட துடிக்கிறாரோ என்று கூட நினைக்க தோன்றுகிறது. தமிழகத்தில் இவர் அதிமுக கட்சியினரை மட்டுமே சந்திக்கவில்லை. அவர்கள் குறித்து மட்டுமே கமல் மிகவும் கோபமாக கருத்து தெரிவித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டெல்லியோ டெல்லி அதேபோல் இவர் டெல்லி பாணியையும் கையில் எடுத்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசியுள்ளார். நாளை கட்சி கூட்டத்தில் வேறு அவர் பங்கேற்கவுள்ளார். இதனால் டெல்லியில் கெஜ்ரிவால் செய்ததை இங்கு இவர் செய்ய நினைக்கிறார் என்று கூட சொல்ல முடியும்.
என்ன கொள்கை காவி பாதி கருப்பு மீதி என்ற குழப்பங்களுக்கு மத்தியில் நாளை கட்சியின் கொள்கையை கமல் வெளியிடுகிறார். பெரிய அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். கமல் சொல்வது போலவே சொல்ல வேண்டும் என்றால், ''உங்ககிட்ட கொள்கை இல்லைனுலாம் சொல்லல, கொள்கை இருந்தா நல்லா இருக்கும்ன்னுதான் சொல்லுறோம் பாஸ்''!