கடலுக்கு அடியில் ஸ்ரேயா நடத்திய டூ பீஸ் அமர்க்களம்
மார்க்கெட் டல்லடிக்கும் ஹீரோயின்கள் மட்டுமல்லாமல் மார்க்கெட்டில் இருக்கும் நடிகைகளும் தங்களது வாய்ப்பை அதிகரிக்கவோ, தக்கவைக்கவோ சமீபகாலமாக டூ பீஸ், டாப்லெஸ் புகைப்படங்களை இணைய தள இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்து கவனத்தை கவர்கின்றனர். இதற்கு ரசிகர்களிடம் வரவேற்பும் இருக்கிறது, துப்புகெட்ட வேலை செய்யாதீர்கள் என்று கழுவி ஊற்றும் ரசிகர்களும் இருக்கிறார்கள். இந்த விமர்சனங்களை சில நடிகைகள் சீரியஸாக எடுத்துக்கொண்டு பதில் அளித்தாலும் பல ஹீரோயின்கள் கண்டுகொள்ளாமல் தங்களது கவர்ச்சியால் கல்லா கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.கடந்த சில வருடங்களாகவே பட வாய்ப்புகள் மந்தமாகி அவ்வப்போது ஒருசில படங்களில் தலைகாட்டி வருகிறார் ஸ்ரேயா. வருடங்கள் உருண்டோடினாலும் தனது இளமையை கட்டுக்குலையாமல் பாதுகாத்து வருகிறார். இதுவரை ஸ்ரேயாவை டூ பீஸ் நீச்சல் உடையில் பார்க்காதவர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் தனது இளமையை கடலுக்கு அடியிலிருந்து கொண்டு விருந்தாக்கி இருக்கிறார்.
சமீபத்தில் இந்தோனேசியா சென்ற ஸ்ரேயா அங்குள்ள பான்டா கடல் பகுதிக்கு பிரபல புகைப்படக் கலைஞரை அழைத்துச் சென்றார். கடலுக்கு அடியில் போட்டோ ஷூட் நடத்துவதே இவர்களது திட்டம்.இருவரும் கடலுக்கு அடியில் மூழ்கி சென்றனர். புகைப்படக்கலைஞர் கேமரா, கவச உடை களுடன் சென்றாலும் ஸ்ரேயா டூ பீஸ் மட்டுமே அணிந்து கடலுக்குள் பாய்ந்தார். அங்கிருந்தபடி விதவிதமான போஸ்களில் ஸ்ரேயாவின் கவர்ச்சி படங்களை படமாக்கினார் புகைப்பட நிபுணர். பிறகு அதை இருவருமே தங்களது இணைய தள பக்கங்களில் பகிர்ந்தனர். டூ பீஸ் அணிந்து நடிக்க தயார் என்று சிக்னல் காட்டவே ஸ்ரேயா இந்த தடாலடி போட்டோ ஷூட் நடத்தியதாக கூறப்படுகிறது.