பாடலுக்கு குட் பை சொன்ன எஸ்.ஜானகி
கடந்த 65 வருடங்களாக சினிமாவில் பின்னணி பாடி வந்தவர், எஸ்.ஜானகி. சென்னையைக் காலி செய்துவிட்டு ஐதராபாத்தில் செட்டிலாகியிருந்த அவர், வரும் 28ம் தேதி மைசூரில் நடக்கும் மேடை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடுகிறார். இதுதான் அவர் பாடும் கடைசி நிகழ்ச்சி என்று அவரே தெரிவித்துள்ளார். இனி அவர் பாட மாட்டாராம். பாடலுக்கு அவர் குட் பை சொன்னதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று, அவரது ரசிகர் வட்டாரம் வேண்டுகோள் விடுத்துள்ளது.