அக்ஷய்குமாரால் ரஜினிகாந்தின் 2.0 படம் ரிலீஸ் தள்ளிப்போகிறது?
ரஜினி நடிக்கும் 2.0 படம், 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது.. கடந்த மாதமே படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து விட்டது. படம் 3டி தொழில்நுட்பத்தில் வெளிவருவதால் அதற்கான பணிகளும், கிராபிக்ஸ் பணிகளும் நடந்து வருகிறது.
படத்தை தீபாவளிக்கு வெளியிட இயக்குனர் ஷங்கரும், ரஜினியும் விரும்பினார்கள். ஆனால் பணிகள் முழுமை அடையாததால் தீபாவளிக்கு படம் வெளிவரவில்லை. படம் 2018 ஜனவரி 26ந் தேதி குடியரசு தினத்தன்று வெளிவரும் என்று லைகா நிறுவனம் அறிவித்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு துபாயில் இதன் பாடல் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இந்த நிலையில் படம் குடியரசு தினத்துக்கு வெளிவரவில்லை என்றும், ஏப்ரல் மாதம் கோடை விடுமுறையில் தான் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
2.0 படத்தில் ரஜினிக்கு அடுத்த முக்கிய கேரக்டரில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ள ஹிந்திப் படமான பேடுமேன் குடியரசு தினத்துக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அக்ஷய்குமார் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஒரு பெரிய நடிகரின் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளிவர வாய்ப்பில்லை என்பதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போகலாம் என்கிறார்கள். ஆனால் இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் இதுவரை அதிகாரபூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.
Not all superheroes come with capes! Bringing you the true story of a real superhero, #Padman this Republic Day - 26th January, 2018! pic.twitter.com/hcEcJPO6Up
— Akshay Kumar (@akshaykumar) 29 October 2017