புகழ் பெற்ற விஞ்ஞானி யஷ் பால் மரணம்!
பிரபல விஞ்ஞானியும் அறிவியல் கல்வி நிபுணருமான யஷ் பால் காலமானார்; அவருக்கு வயது 90.
விண்வெளிக் கதிர்கள் குறித்த ஆய்வுக்காக புகழப்பட்டவர் அவர்.
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் 'டர்னிங் பாயிண்ட்' அறிவியல் நிகழ்ச்சி மூலம் நாடு முழுவதும் அவர் பிரபலமானார்.
பத்ம பூஷண் விருது பெற்றுள்ள யஷ் பால், கடந்த 5 ஆண்டுகளாக நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்!