இலங்கையில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு பட்டியல்
இலங்கையில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு பட்டியல் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
முதல் போட்டி காலேயில் இன்று தொடங்கி நடந்து வருகிறது
இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியினருக்கு அங்குள்ள வெப்ப நிலையை பொறுத்து உணவுப் பொருட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காலை8 மணிக்கு சிற்றுண்டி வழங்கப்படுகிறது. அன்னாசி, வாழை, ஆரஞ்சு, அவோகடோ, கார்ன் ப்ளாக், கோதுமை ப்ளாக், சோகோ போப்ஸ், உலர்ந்த திராட்சை, ஆடை நீக்கிய பால், பாதாம், ஜாம், செயற்கை வெண்ணை, தேன், ஆரஞ்சு பழச்சாறு, பிரவுன் பிரெட், பலதானியம், கொழும்பு குறைந்த வெண்ணை, துண்டாக்கப்பட்ட சிக்கன், மீன், அவித்த முட்டை, வெட்டப்பட்ட தக்காளி, வெள்ளரிக்காய், வெங்காயம், லெட்யூஸ், டீ, காபி, கிரீன் டீ. இந்த உணவுகளில் விரும்பியதை சாப்பிடலாம்.
மதிய உணவு மதியம் 12 மணிக்கு வழங்கப்படுகிறது. மக்காச்சோள சூப், பிரெட் ரோல், நான், காய்கறி சலாட், பீட்ருட் சலாட், சோறு, தயிர் சோறு, சிக்கன் கபாப், சிக்கன் மஞ்சூரியன், டால் நவ்ரத்னா, அவித்த காயகறிகள், கொழுப்பு குறைந்த தயிர், அப்பளம், இந்திய ஊறுகாய், வாழைப்பழம், ப்ரூட் சலாட், யோக்கர்ட், கிங் கோக்கனட் வாட்டர்.
மாலை 2.30 மணிக்கு தந்தூரி சிக்கன் சான்ட்விச் அல்லது மட்டன் ரேப்ஸ், ப்ரூட் கேக், குக்கீஸ், பிஸ்கட்ஸ், டீ, காபி, கிரீன் டீ. இவற்றில் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
போட்டிக்கு பிறகு மாலை 5 மணிக்கு உணவு வழங்கப்படுகிறது. சாப்பாடு, சிக்கன் மகானி, மஞ்சள் பருப்பு, பன்னீர் புர்ஜி, நான், ப்ரூட் பிளாட்டர். ஆகியவை வழங்கப்படும்.
இதுதவிர வட இந்திய உணவு வகைகளை சாப்பிடவும் வசதி உள்ளது. உதாரணத்திற்கு கார்ன் பாலக், உருளை மேதி, சிக்கன் தந்தூர், பன்னீர் லாபப்டார் போன்றவற்றை சாப்பிடலாம்.