டென்ஷனிலிருந்து விடுபட இலியானா டிப்ஸ்
பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை என்றால் குஷியில் கும்மாளம் போடுவது போல் நடிகை இலியானாவுக்கு படப்பிடிப்பிலிருந்து விடுமுறை எடுத்துக் கொண்டு ஊர்சுற்றுவதென்றால் ரொம்ப பிடிக்கும். தொடர்ந்து நடித்துவிட்டு, 2 நாள் கேப் கிடைத்தால் உடனே மூட்டையும் முடிச்சுமாக காதலன் ஆண்ட்ரு நிபோன் உடன் வெளிநாடு பறந்துவிடுகிறார். சமீபத்தில் ஃபிஜி தீவுக்கு சென்று விடுமுறையை கொண்டாடினார். இதுபற்றி இலியானா கூறியது: 4 மாத படப்பிடிப்புக்கு இடையே கொஞ்சம் ஓய்வு கிடைத்தது.
உடனே ஃபிஜிக்கு பறந்துவிட்டேன். அங்கு பல்வேறு சாகச விளையாட்டுகளில் ஈடுபட்டேன். இதன் மூலம் உயரத்தை கண்டு எனக்கிருக்கும் பயத்திலிருந்து வெளிவர முடிந்தது. எந்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்பதை என் மூடுக்கு ஏற்ப முடிவு செய்வேன். சில சமயம் எனது பங்களா அருகிலேயே அழகான வெளித்தோற்றங்களை ரசித்துக்கொண்டிருப்பேன்.
ஒருசில நாட்கள் ஓய்வு கிடைக்கிறதென்றால் உடனே சுற்றுலா செல்வதற்கு உறுதி செய்துவிடுவேன். நம்முடைய நேரத்தை பிஸியாக பணியாற்றும் நாட்களே பெரும்பாலும் எடுத்துக்கொள்கின்றன. அந்த நேரத்தை நமக்காகவும் சில சமயம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் இதுபோன்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டும். நமது டென்ஷனிலிருந்து விடுபட இது நிச்சயம் உதவியாக இருக்கும்.