போதை விவகாரம்: அப்ரூவர் ஆகிறார் ஒளிப்பதிவாளர் : பீதியில் நடிகர்-நடிகைகள்
போதை மருந்து பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக நடிகர்கள் ரவிதேஜா, நவ்தீப், சார்மி, முமைத்கான் உள்ளிட்ட 12 பேருக்கு அமலாக்க துறை நோட்டீஸ் அனுப்பியது. அதை ஏற்று அதிகாரிகள் முன்னிலையில் புரி ஜெகநாத் ஆஜராகி பதில் அளித்தார். நடிகை சார்மி உடல்நிலை பாதிப்பு காரணமாக ஆஜராகவில்லை. நேற்று நடிகர் சுப்பராஜு விசாரணைக்கு ஆஜரானார். இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கும் ஒளிப்பதிவாளர் ஷியாம் கே.நாயுடு சில தகவல்களை அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறாராம்.
அவரை தங்களது தரப்பில் அப்ரூவராக மாற்றுவதற்கு அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டிருக்கின்றனர். இதனால் நடிகர், நடிகைகள் பீதியில் ஆழ்ந்திருக்கின்றனர். முமைத்கானுக்கு அவரது வீட்டில் நோட்டீஸ் அளிக்க அதிகாரிகள் சென்றபோது அங்கு அவர் இல்லை.
படப்பிடிப்புக்காக புனே சென்றிருப்பதால் அவரை தேடி அங்கு சென்றிருக் கின்றனர். முமைத்கானை இன்னும் சந்திக்க முடியாததால் புது டெக்னிக்கை பயன்படுத்த முடிவு செய்திருக்கின்றனர். முமைத்கானின் செல்போன் வாட்ஸ் அப்பில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மெசேஜ் அனுப்பப்பட்டிருக்கிறது. அவரிடமிருந்து பதில் வந்ததும் அதற்கேற்ப விசாரணை தேதியை மாற்றி அமைக்க அதிகாரிகள் முடிவு செய்ய உள்ளனர்.