ஆண்களின் விந்தணு குறைவு மனித இனத்தின் அடையாளமே அழிந்து போகும் அபாயம்




ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தற்போதைய வேகத்தில் தொடர்ந்து குறைந்துக் கொண்டே சென்றால், மனித இனத்தின் அடையாளமே அழிந்து போய்விடலாம் என்று அஞ்சப்படுகிறது.

 ஆரோக்கியமற்ற மேற்கத்திய வாழ்க்கை முறையால் உந்தப்பட்டமனிதர்கள்   விந்தணு எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளனர். 1970 முதல் கருத்தரிப்பில் 60  சதவீதம்  வீழ்ச்சி காணப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
 
வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து ஆண்களின் விந்தணுக்கள் குறைந்து வருகிறது.  விந்தணுக்களின் எண்ணிக்கை தற்போது பாதியாக குறைந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

1973 முதல் 2011-ஆம் ஆண்டுவரை வரை மேற்கொள்ளப்பட்ட 185 ஆய்வுகளின் முடிவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தொற்று நோய் நிபுணரான (அபெடிமியோலாஜிஸ்ட்) டாக்டர் ஹகாயி லெவின், இதே போக்கு தொடர்ந்தால், மனித இனம் அழிந்து போகும் வாய்ப்பு அதிகமாகும் என்கிறார்.

வாழ்க்கை முறைகளை மாற்றியமைத்துக் கொள்ளாவிட்டால், எதிர்காலத்தில் நடக்கப்போகும் அசம்பாவிதங்களை நினைத்தால் கவலையாக இருக்கிறது என்கிறார்.

வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் அமெரிக்காவில் வசிக்கும் ஆண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறும் டாக்டர் லெவின், ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் இந்த அளவு பாதிப்பு இல்லை என்கிறார்.

ஆனால்  ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் இதுவரை பெரிய அளவிலான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படாததை ஆராய்ச்சியாளர்கள்' சுட்டிக்காட்டுகின்றனர். இந்த நாடுகளில்  இந்தப் பிரச்சினை தற்போது இல்லாவிட்டாலும், அவர்களும் என்றாவது ஒருநாள் இந்தப் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும் என்று டாக்டர் லெவின் கூறுகிறார்.

எனினும், மனித இனப்பெருக்கம் (மனிதர்களில் இனப்பெருக்க செயல்முறை) குறித்த இந்த அறிக்கை மீது சில நிபுணர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad