வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவது நன்மையா?.........




பொதுவாக உணவு சாப்பிட்ட பிறகு, பழங்களை எடுத்துக்கொள்ளக்கூடாது. பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும். அவ்வாறு வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு மற்றும் உடலின் மற்ற செயல்களுக்கு தேவையான அதிகப்படியான ஆற்றலை தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. பழம், வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான உணவு கெட்டுப்போக ஆரம்பிக்கிறது. உணவுக்குப்பின் பழம் எடுக்கும்போது, பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால், வாயு உற்பத்தியாகி வயிறு ஊத காரணமாகிறது. நரை முடி தோன்றுவது, தலையில் வழுக்கை விழுவது, நரம்புகளின் திடீர் எழுச்சி, கண்களின் கீழ் கருவளையம் தோன்றுவது இவையெல்லாமே, வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்துக்கொள்ளாததுதான்.

  பழச்சாறு அருந்தும் தேவை ஏற்படும்போது, பிரஷ்-ஷான பழச்சாறுகளையே அருந்த வேண்டும். டின், பாக்ெகட் மற்றும் பாட்டில் இவற்றில் அடைக்கப்பட்ட ரெடிமேட் பழச்சாறுகள் வேண்டவே வேண்டாம். சூடாக்கப்பட்ட பழச்சாறுகளையும் குடிக்க கூடாது. பதப்படுத்தப்பட்ட, சமைத்த பழங்களில் உள்ள விட்டமின்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன. நமக்கு அதன் சுவை மட்டுமே கிடைக்கும். பழச்சாறு அருந்துவதை விட, பழங்களை முழுதாக சாப்பிடுவது மிகவும் நல்லது. பிரஷ்-ஷான பழச்சாறு குடிக்கும்போது, மடமடவென குடிக்காமல், மெதுவாக ஒவ்வொரு வாயாக அருந்த வேண்டும். ஏனென்றால், பழச்சாற்றை விழுங்குவதற்கு முன், அதனை வாயிலுள்ள உமிழ்நீரோடு நன்கு கலக்கச்செய்து பின்னர் உள்ளே அனுப்ப வேண்டும். இப்படி செய்யும்போது, உடல் உறுப்புகளை சுத்தம் செய்யும். உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும். விரதம் இருப்பவர்கள், 3 நாட்கள், பழங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு விரதம் இருக்கலாம். கொழுப்பு நீங்கி, உடல் புத்துணர்வு ஏற்படும்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]