இத்தனை மருத்துவ குணங்களை கொண்டுள்ளதா இஞ்சி...!
சக்தி நிறைந்த இஞ்சியின் தோல் பகுதி மட்டும் நஞ்சு போன்றது. தோலை நீக்கிவிட்டுத்தான் இஞ்சியை பயன்படுத்த வேண்டும். இஞ்சிக்கு உஷ்ணப்படுத்தும் குணம் உண்டு என்றாலும் கபம், வாதம், சிலேத்துமம் போக்குகிறது. பித்தம் அதிகமாகி தலைசுற்றல், விரக்தி ஏற்படுவதுண்டு. சுக்குத் தூளை தேனில் கலந்து சாப்பிட்டால் குணமாகும்.
* இஞ்சி பித்தம், பித்த வாய்வு, பித்த தளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்கள் உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்து விடுகிறது.
* இஞ்சிக்கு, ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு. குடலில் சேரும் கிருமிகளை அழித்துவிடும். கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுவலி ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும். இஞ்சியை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளக்கூடாது.
* பசியின்மை, வாந்தி, குமட்டல், அஜீரணம் போன்றவைகளை போக்கும் சக்தி இஞ்சிக்கு உண்டு. இது ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்பட்டு ஆயுளை அதிகரிக்கவும் செய்யும்.
* இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
* இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
* இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து, அந்த நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.
* இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து, ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட, வாய்வுத் தொல்லை நீங்கும்.
* இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து, காலையில் ஒரு கரண்டி வீதம், ஒரு வாரம் குடித்துவர, நீரிழிவு குறையும்.