உரமானியத்திற்கு ஆதார் அட்டை கட்டாயம் என்ற அறிவிப்புக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு
தஞ்சை:
ஆதார் அட்டை இருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே உரமானியம் கிடைக்கு என்ற அரசின் நடவடிக்கைக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தொடக்க கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் உரக்கடைகளில் விவசாயிகள் மானியம் விலையில் உரம் வாங்க ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. உரம் வழங்குவதிலும் ஆதார் அட்டையை மத்திய அரசு கட்டாயம் ஆக்கியுள்ளதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்னும் பலருக்கு ஆதார் அட்டை கிடைக்காத நிலையில் இத்திட்டம் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தஞ்சையில் தொடக்க கூட்டுறவு வங்கிகளுக்கு கையடக்க விற்பனை நிலைய கருவி வழங்கும் விழா தமிழக வேளாண்துறை அமைச்சர் இரா.துரைகண்ணு தலைமையில் நடந்தது. இதில் உரமானிய இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த கருவியில் ஆதார் எண்ணை குறிப்பிட்டு விவசாயிகள் கைரேகை வைத்தால் மட்டுமே விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் மசோதாவை மத்திய அரசு சட்ட மசோதாவாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. ஆனால் ஆதார் அட்டை தனிநபர் உரிமையை மீறும் செயல் என்று அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்ந வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருவது குறிபிடத்தக்கது.