பூனம் காதலுக்காக நண்டு விடு தூது
காதல் ஜோடிகளுக்கு தூது செல்ல இதுவரை ஆடு, மாடு, குரங்கு, நாய் போன்றவற்றை படங்களில் பயன்படுத்தியிருக்கின்றனர். தற்போது ஒரு இயக்குனர் நண்டுவை பயன்படுத்துகிறார். இதுபற்றி ‘நண்டு என் நண்பன்’ பட இயக்குனர் ஆண்டாள் ரமேஷ் கூறும்போது, ‘வழக்கமான காதல் கதைகள் ஆயிரக்கணக்கில் வந்துவிட்டது.
காதலை சொல்லும் விதத்தி லும் வித்தியாசத்தை எதிர்பார்க்கிறார்கள். அந்த வகையில் இதன் ஸ்கிரிப்ட் புதிய யுக்தியுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. காதல் ஜோடியை நண்டு எப்படி சேர்த்து வைக்கிறது என்பதுதான் சுவாரஸ்யம். நண்டும் படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கிறது. இதற்காக கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் நண்டு உருவாக்கப்படுகிறது.
ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர் கள் இதனை உருவாக்குகின்றனர். ஜித்தன் ரமேஷ், பூனம் கவுர் ஜோடியுடன் சாந்தினி, சந்தானபாரதி, ஆர்என்ஆர் மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள். எஸ்.நாகராஜ் தயாரிப்பு. சேவிலோ ராஜா ஒளிப்பதிவு. எஸ்.என்.அருணகிரி இசை. ஏற்கனவே ஆசாமி, இன்னார்க்கு இன்னாரென்று படங்களை நான் இயக்கி இருக்கிறேன் என்றார்.