ஆமாம், நிலவிற்கு ஏன் திரும்ப போகவே இல்லை.? யாராச்சும் யோச்சீங்களா.?
பூமியின் இயற்கையான செயற்கைகோள் அழைக்கப்படும் நிலவு - பூமி கிரகத்தின் மிக அருகமையில் (384,400 கிமீ) இருப்பினும் கூட மறுபடியும் நாம் ஏன் மனிதர்களை அங்கு அனுப்பவில்லை.? ஏற்கனவே நிலவு என்பது முழுக்க முழுக்க திட்டமிட்டு கட்டப்பட்ட ஒரு விண்வெளி பொருள் என்ற கோட்பாடுகள் உள்ள நிலைப்பாட்டில், நிலவிற்கு ஏன் மனிதர்கள் மீண்டும் மீண்டும் போகவில்லை.?
சுமார் 225 மில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல போட்டிபோடும் உலக விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் ஏன் நிலவை கருத்தில் கூட கொள்ளவில்லை.? இறுதியாக நிலவிற்கு சென்ற அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, நிலவு சார்ந்த இருண்ட ரகசியம் எதையாவது மறைகிறதா.? - என்றெல்லாம் நீங்கள் எப்போதாவது யோசித்து உண்டா..?
இப்படியெல்லாம் யோசித்ததில் இருந்து கிளம்பியது தான் நிலவு சார்ந்த ஒரு சதியாலோசனை கோட்பாடு ஆன - டார்க் சீக்ரெட் ஆப் மூன்.!
காணமுடியாத நிலவு பகுதி
நிலவின் முதுகு அதாவது, பூமியின் எந்தவொரு பகுதியில் இருந்து பார்த்தலும் காணமுடியாத நிலவு பகுதி தான் ஏகப்பட்ட சதியாலோசனைகளும், புரளிகளும் கிளம்ப காரணமாகும். நிலவின் முதுகில் அதாவது பின்பக்கத்தில் எக்ஸ்டராடெரஸ்ட்ரியல்ஸ் எனப்படும் வேற்று உலக ஜீவாராசிகளின் ரகசிய தளங்கள் (Alien secret Moon base) இருப்பதாக சில சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் சந்தேகிக்கின்றன.
முழுமையாக ஆராய்ந்துவிட்டோமா என்ன.?
மேற்குறிப்பிட்டபடி, தொலைதூர கிரகமான செவ்வாய் வரை ஆராயும் நாம்.? ஏன் மறுபடியும் நிலவிற்கு மனிதர்களை அனுப்பவில்லை.? ஒருவேளை நிலவு கிரகத்தை முழுமையாக ஆராய்ந்துவிட்டோமா என்ன.? அப்படியானால் நிலவு சார்ந்த சந்தேகங்களுக்கு தீர்வுகள் தான் என்ன.? போன்ற பல கேள்விக்கான பதிலையும் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் எதிர் நோக்குகின்றன.
ஏன் நிலவில் குடியிருப்பு திட்டமிடவில்லை.?
செவ்வாயில் குடியிருப்புகள் அமைக்க திட்டமிடும் உலக நாட்டு விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் ஏன் நிலவில் குடியிருப்புகளோ, தளங்களோ அமைக்க திட்டமிடவில்லை.? இதில் இருந்தே நிலவில் பல மர்மங்கள் உள்ளன அவைகள் மறைக்கப்படுகின்றன என்பது தெளிவாகிறது என்றும் சதியாலோசனை கோட்பாடுகள் கேள்வி எழுப்புகின்றன.
மிதக்கும் விண்வெளி நிலையத்தை போல்
நிலவானது - எந்தவொரு மூலப்பொருட்கள் அல்லது பொருட்களின் அணுகலுமின்றி செயற்கையாக வடிவமைக்கப்பட்ட, ஒரு மிதக்கும் விண்வெளி நிலையத்தை போல் தான் தோன்றுவதாகவும் கோட்பாடுகள் சந்தேகிகிறது.
நம்பகத்தன்மையை குறைக்கிறது
நிலவில் எக்ஸ்டராடெரஸ்ட்ரியல்ஸ் தளம் உள்ளது. அங்கு தரை இறங்குவதும், தங்குவதும் விபரீதமானது என்ற கருத்தை நிலவிற்கு சென்ற நாசாவின் விண்வெளி வீரர்கள் பெரும்பாலும் ஒற்றுப்போகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இங்கு நிலவின் மீதான நம்பகத்தன்மையை குறைக்கிறது.
லூனா' என்று வரையறுக்கப்பட்டுள்ளது
நிலவு சார்ந்த மர்மமான சதியாலோசனை கோட்பாடுகள் ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் கடற்படை புலனாய்வு அலுவலகத்தை (Naval Intelligence Office) சேர்ந்த மில்டன் கூப்பர் நம்ப முடியாத கருத்தொன்றை பகிர்ந்துள்ளார். அவரின் கருத்துப்படி "நிலவில் ஏலியன் தளங்கள் இருப்பது உண்மைதான், அமெரிக்க கடற்படை புலனாய்வு சமூகத்தினரின்படி அந்த தளமானது 'லூனா' என்று வரையறுக்கப்பட்டுள்ளது" என்கிறார்.
சிறிய வகை பறக்கும் தட்டு
அதுமட்டுமின்றி அந்த லூனா பகுதியில் ஒரு பெரிய சுரங்க செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருகிறது என்ற ஆதராமில்லா தகவலையும் கூப்பர் தெரிவித்துள்ளார். அந்த சுரங்க செயல்பாடுகளில் தான், வேற்றுகிரக வாசிகளின் தாய் கப்பல்கள் ஈடுப்பட்டு கொண்டிருக்கின்றன. அதில் இருந்து வரும் சிறிய வகை பறக்கும் தட்டு அல்லது விண்கலங்களை தான் நாம் பூமியில் அவ்வபோது பார்க்க நேரிடுகிறது என்ற நம்பமுடியாத தகவலையும் கூப்பர் தெரிவித்துள்ளார்.