ஐசிசி கனவு அணியின் கேப்டனாக இந்தியாவின் மித்தாலி ராஜ்........
* கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதில் பிசிசிஐ முன்னாள் தலைவர் என்.சீனிவாசன், முன்னாள் நிர்வாகி நிரஞ்சன் ஷா இருவரும் பங்கேற்க உச்ச நீதிமன்றம் நேற்று தடை விதித்தது. லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பான இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 18ம் தேதி நடைபெறும்.
* மகளிர் உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகள் அடங்கிய ஐசிசி கனவு அணியின் கேப்டனாக இந்தியாவின் மித்தாலி ராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அணி விவரம்: பியூமான்ட் (இங்கி.), வுல்வார்ட் (தெ.ஆப்.), மித்தாலி (கேப்டன்), எலிஸ் பெர்ரி (ஆஸி.), சாரா டெய்லர் (இங்கி.), ஹர்மான்பிரீத், தீப்தி ஷர்மா (இந்தியா), மரிஸன்னே காப், வான் நியகெர்க் (தெ.ஆப்.), அன்யா ஷ்ரப்சோல், அலெக்ஸ் ஹாட்லி (இங்கி.). 12வது வீராங்கனை - நதாலி ஸ்கிவர் (இங்கி.).