குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிக்கலாம் இன்றுடன் நிறைவு: பிரணாப் மக்களுக்கு உரை
டெல்லி: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிக்கலாம் இன்றுடன் நிறைவடைகிறது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். புதிய குடியரசுத் தலைவராக பதவி ஏற்க உள்ள ராம்நாத் கோவிந்துக்கு பிராணப் முகர்ஜி வாழ்த்துக்கள் தெரிவித்தார். தமது பதவிக்காலத்தில் தாம் கற்றுக்கொண்டது ஏராளம் என்று அவர் தெரிவித்துள்ளார். பன்முக கலாச்சாரம்,மொழி, பண்பாடே இந்திய நாட்டை உருவாக்கியுள்ளது என்றும் பிரணாப் தெரிவித்துள்ளார்.
வாதங்களுக்கு மறுத்தாலும் நாடு பன்முகத்தன்மை கொண்டது என்பதை மறுக்க முடியாது என்றும் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார். தற்போது நாட்டில் பரவலாக வன்முறையை எதிர்கொண்டுள்ளதாக பிரணாப் வேதனை தெரிவித்துள்ளார். கல்வி மட்டுமே இந்தியாவை அதன் அடுத்த பொற்காலத்துக்கு எடுத்துச் செல்லும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கல்வியை உலகத்தரம் வாய்ந்ததாக உயர்த்த வேண்டியது அவசியம் என்றும் பிரணாப் கூறியுள்ளார். புதுமைகளை உருவாக்கும் புத்தாக்க சிந்தனைகளை கல்வி நிலையங்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் கூறினார்.