தமிழில் டப்பிங் ஆகிறது ரெஜினாவின் தெலுங்கு படம்..........



தெலுங்கில் ரிலீசான ரா ரா கிருஷ்ணய்யா, தமிழில் மகேந்திரா என்ற பெயரில் டப்பிங் ஆகிறது. சந்தீப் கிஷன், ரெஜினா கெசன்ட்ரா, ஜெகபதி பாபு, காவேரி, தணிகலபரணி, ரவிபாபு நடித்துள்ளனர். ஐமாவதி சாம்பமூர்த்தியின் வி.வி.எஸ் கிரியேஷன்சுக்காக என்.சாய்ராம், எஸ்.ராஜேஷ், ராஜஸ்ரீ, மணிகண்டன் தயாரித்துள்ளனர்.

ஒளிப்பதிவு, சாய் ஸ்ரீராம். இசை, அச்சு ராஜாமணி. இயக்கம், மகேஷ் பாபு. நல்லவனாக வாழ்பவனை தங்கள் வழிக்குக் கொண்டு வர தீயவர்கள் சிலர் முயற்சிக்க, அவர்களைத் தன் வழிக்குக் கொண்டு வர அந்த நல்லவன் முயற்சிக்கிறான். இறுதியில் யார் ஜெயித்தது என்பது கதை.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url