உலகளாவிய இணைய தாக்குதல்: பணப்பறிப்பா? அரசியலா?
உலகெங்கும் கணினிகளை நிலைகுலையச்செய்திருக்கும் இணைய தாக்குதலின் சூத்திரதாரிகளையும், இந்த தாக்குதலுக்கான காரணத்தையும் இணைய பாதுகாப்பு நிபுணர்களால் இன்னமும் கண்டறியமுடியவில்லை.
இந்த தாக்குதலை மேற்கொணவர்களை நீதியின் முன் நிறுத்த அமெரிக்கா உறுதிபூண்டிருப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்ஸில் தெரிவித்துள்ளது.
கணினிகள் மீதான தாக்குதலை தடுக்கும் எதிர்ப்புச் செயலியை கண்டுபிடித்திருப்பதாக பாதுகாப்புத்துறை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், இப்படியான பணயப்பணம் கேட்கும் மோசமான தாக்குதல்கள் பாதுகாப்புரீதியில் பலவீனமான கணினிகளுக்கு பரவுவதை தடுக்க உடனடியாக வழிகாண வேண்டுமென அரசுகள் வலியுறுத்துகின்றன.