பார்ரா.. டிரம்ப், மோடியைக் கூட விடலையே இந்த ஓவியா லைக்கர்ஸ்!
சென்னை:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவை டார்கெட் செய்யும் கும்பலுக்கு எதிராக கொதித்துள்ளனர் நெட்டிசன்கள். பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் உண்மையாக இருப்பவர் ஓவியா தான் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதனாலேயே அவருக்கு ரசிகர்கள் கூட்டம் பெருகிவிட்டது. இதனால் பொறாமை கொண்டுள்ள ஜூலி, நமீதா, காயத்ரி ஆகியோர் ஓவியாவை வெளியேற்ற வேண்டும் என ஒத்தக்காலில் நின்று வருகின்றனர். இதற்காக பல உள்ளடி வேலைகளையும் செய்து வருகின்றனர்.
ஜூலிக்கு எதிராக மீம்ஸ்
ஓவியாவை தூங்க விடாமல் டார்ச்சர் செய்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்துள்ள ஓவியா ரசிகர்கள் காயத்ரி, நமீதா, ஜூலிக்கு எதிராக மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.
நடிகர் நடிகைள் ஆதரவு
ஓவியாவுக்கு ஆதரவாக நடிகர் நடிகைகளும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஓவியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது போன்ற டிவீட்களை வெளியிட்டுள்ளனர்.
இந்தியா மீது நடவடிக்கை
ஓவியா எலிமினேட் செய்யப்பட்டால் இந்தியா மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயாராக உள்ளதாக ட்ரம்ப் கூறுவது போல் உள்ளது இந்த மீம்..
தமிழகத்தின் மீது போர்
தலைவி ஓவியாவை பிக்பாஸில் இருந்து வெளியேற்றினால் தமிழ்நாட்டின் மீது போர் தொடுக்கவும் மத்திய அரசு தயங்காது என்கிறது இந்த மீம்..