போதை மருந்து விவகாரம் : காஜல் அகர்வால் மேனஜர் கைது
போதை மருந்து விவகாரம் தொடர்பாக நடிகர்கள் ரவிதேஜா, தருண், நவ்தீப், சார்மி, முமைத்கான் உள்ளிட்ட 12 பேர்களுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். கடந்த சில தினங்களுக்கு முன் விசாரணை தொடங்கியது. நடிகர்கள் ரவிதேஜா, தருண், சுப்பராஜு, ஒளிப்பதிவாளர் ஷியாம் கே.நாயுடு உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. நேற்று நவ்தீப்பிடம் விசாரணை நடத்தப்பட்டது. விரைவில் சார்மியிடம் விசாரணை நடக்கவிருக்கிறது.
முகவரியை மாற்றிக்கொடுத்து தலைமறைவாக இருந்த முமைத்கானை வலைபோட்டு போலீஸார் கண்டுபிடித்தனர். தான் படப்பிடிப்பிலிருப்பதால் விசாரணையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர்களிடம் முமைத்கான் கேட்டார். அதை போலீசார் ஏற்கவில்லை.
இதையடுத்து அவரும் விசார ணைக்கு ஆஜராக சம்மதித்திருக்கிறார். இந்நிலையில் சில நாட்களாக நடைபெற்ற விசாரணையில் காஜல்அகர்வால், ராசி கண்ணா, லாவன்யா திரிபாதி உள்ளிட்டோரின் மேனஜர் ரோன்சன் ஜோசப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.