டயானாவுடனான கடைசி உரையாடலை நினைத்து வருந்தும் வில்லியம், ஹாரி
இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹாரி தங்களது தாயுடனான கடைசி உரையாடல் என்பது விரக்தியடைந்த அவசர தொலைப்பேசி அழைப்பு என்று தங்களுடைய வருத்தத்தை மனம் திறந்து பேசியுள்ளனர்.
இளவரசி டயானாவின் உயிர் பிரிந்தபோது இளவரசர் ஹாரிக்கு 12 வயது. ''எனக்கு நினைவில் இருப்பது என்னவென்றால் என் வாழ்க்கை முழுவதும் நான் வருந்தும் ஒரே விஷயம் அந்த தொலைபேசி அழைப்பு எவ்வளவு குறுகியதாக இருந்தது மட்டுமே'' என்கிறார் ஹாரி.
டயானா இறந்து 20 ஆண்டுகளை குறிக்கும் ஐடிவி ஆவணப்படத்திற்காக ஹாரி மற்றும் வில்லியம் மனம் திறந்து பேசியுள்ளனர். டயானாவின் கேளிக்கை நிறைந்த வளர்ப்பு குறித்து இருவரும் பேசியுள்ளனர்.
டயானா அவர்களை குறும்பு பிள்ளைகளாக இருக்க ஊக்கப்படுத்தியதாகவும், இனிப்புகளை திருடி வந்து கொடுத்ததாகவும் பழைய நினைவுகளை அசைப்போடுகின்றனர் இளவரசர்கள்.
இந்த நிகழ்ச்சியில், டயானாவுடன் இளவரசர்களின் எடுத்து கொண்ட இதுவரை வெளிவராத புகைப்படங்கள் இடம்பெறுவது சிறப்பு அம்சமாகும்.
இளவரசர் ஹாரி மற்றும் இளவரசர் வில்லியம் இருவரும் டயானாவின் தனிப்பட்ட புகைப்படங்களை பார்த்தபடியே தாயுடனான தங்களது அழகிய நினைவுகள் குறித்து உரையாடினர்.
இந்த நிகழ்ச்சியில் முதலில் கலந்து கொள்வதென்பது சற்று அச்சுறுத்தலுடன் காணப்பட்டார் இளவரசர் வில்லியம், ஆனால் இதுவொரு குணப்படுத்தும் செயல்முறையாக இருந்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
''எங்களுடைய வேலையின் மூலம் அவருடைய மரபை வாழ வைக்க நினைத்தோம். அதற்கு இதுதான் பொருத்தமான வழியாக இருக்கும் என்று நினைக்கிறேன்'' என்றார் அவர்.
தாய் டயானாவுடனான கடைசி உரையாடல் தனது மூளையில் பெரும் பாரமாக இருப்பதாக கேம்பிரிட்ஜின் கோமகன் ஹாரி கூறுகிறார்.
ராணியின் பிறந்த இடமான ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல்லில் உள்ள உறவினர்கள் வீட்டில் இளவரசர்கள் இருந்த போது இளவரசி டயானாவின் மரணம் நிகழ்ந்தது.
''ஹாரியும், நானும் அம்மாவிற்கு பிரியாவிடை சொல்லும் அவசரத்தில் இருந்தோம். என்ன நடக்கப்போகிறது என்பது இப்போது எனக்கு தெரிந்திருந்தால் நான் அந்த சம்பவத்தை பற்றியும், பிறவற்றையும் அவ்வளவு எளிதாக எடுத்து கொண்டிருக்க மாட்டேன்,'' என்றார் வில்லியம்.
இளவரசி டயானா: உடையும்-ஆளுமையும்
அந்த தருணத்தில் தனது தாய் என்ன கூறினார் என்பது நினைவில் இருப்பதாக கூறிய இளவரசர் வில்லியம் உரையாடல் குறித்த தகவல்கள் எதையும் அவர் வெளியிடவில்லை.
இளவரசி டயானாவின் நகைச்சுவை உணர்வை நினைவு கூர்ந்த இளவரசர் ஹாரி, ''அவர் மொத்தமாகவே ஒரு குழந்தையைபோல இருந்தார்.'' என்கிறார்.
தனது தாய் மிகவும் முறைசாராதவராகவும், சிரிப்பு மற்றும் சந்தோஷத்தை மிகவும் விரும்பியதாகவும் இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்.
அவர் ஒரு ஜோக்கர் மாதிரி போன்றவர் என்று மேலும் தெரிவித்தார் வில்லியம்.
மிகவும் சந்தோஷமான ஒரு தருணம் குறித்து ஞாபகப்படுத்திய வில்லியம், கென்சிங்டன் அரண்மனையில் உள்ள தங்களது வீட்டில் மாடல் துறையில் மிகவும் பிரபலமாக இருந்த சிண்டி கிராஃபோர்ட், கிரிஸ்டி டர்லிங்டன் மற்றும் நவோமி காம்பெல் ஆகியோரை தாய் டயானா வீட்டிற்கு அழைத்திருந்ததை கண்டுபிடிக்க பள்ளியிலிருந்து வந்ததை நினைவு கூர்ந்தார்.
''எனக்கு 12 அல்லது 13 வயதிருந்த போது மாடல்களின் போஸ்டர்களை என்னுடைய அறை சுவற்றில் ஒட்டியிருந்தேன்,'' என்று திங்கட்கிழமை வெளியான டயானா, எங்கள் தாய்: அவரது வாழ்க்கை மற்றும் மரபு என்ற ஆவணப்படத்தில் வில்லியம் தெரிவித்துள்ளார்.