கமல்ஹாசன் மகள் அக்ஷரா மதம் மாறினார்
கமல்ஹாசன் 2வது மகள் அக்ஷராஹாசன். அஜீத் நடிக்கும், ‘விவேகம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அவர் கூறியது: இப்போதைக்கு எனது ஆசை நடிப்பு மீதுதான் உள்ளது. அதில் அதிக கவனம் செலுத்துகிறேன். எனது குடும்பத்தினர் எல்லோருமே இத்துறையில்தான் இருக்கிறார்கள். அவர்களுடன் சினிமாவில் பணியாற்ற விரும்புகிறேன். இயக்குனராக வேண்டும் என்பதும் என் ஆசை. அதில் எனது திறமையை நிரூபித்த பிறகு எனது அப்பா கமல், அம்மா சரிகா, அக்கா ஸ்ருதி ஆகியோரிடம் கால்ஷீட் பெற்று அவர்களை வைத்து படம் இயக்குவேன்.
‘புத்த மதம் தழுவிவிட்டீர்களா?’ என்கிறார்கள். அப்பா மற்றும் அக்கா போல் நானும் நாத்திகவாதிதான். ஆனால் எனது தனிப்பட்ட ஆர்வம் காரணமாக புத்த மதம் தழுவியிருக்கிறேன். என் அப்பா அரசியல் பிரவேசம்பற்றி கேட்கிறார்கள். அது அவர் எடுக்கும் முடிவை பொறுத்து இருக்கிறது. அதில் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை.