அடிக்கடி டாப்லெஸ்!
எப்படியும் பாலிவுட்டில் வாய்ப்பு பெற அடிக்கடி டாப்லெஸ் போட்டோ ஷூட் எடுத்து உலா விடுகிறார் எமி ஜாக்சன். ஆனால் இதுவரை அதற்கான பலன் கிடைக்கவில்லையாம்.
‘எ ஜென்டில்மேன்’ படத்தில் ஜாக்குலைனுக்கு நீளமான லிப் கிஸ் கொடுத்து நடித்துள்ளார் சித்தார்த்மல்ஹோத்ரா. இதனால் சித்தார்த்தின் காதலி அலியா பட் டென்ஷனில் இருக்கிறார்.
சல்மான் கானின் ‘டியூப்லைட்’ படத்தில் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடித்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஷாருக்கானின் அடுத்த படத்தில் சல்மான் சில காட்சிகளில் நடிக்கிறார்.
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வியே இன்னும் நடிக்க வரவில்லை. இளைய மகள் குஷிக்கும் சினிமா ஆசை வந்துவிட்டதாம். படிப்பை பாதியில் விட நினைக்கிறாராம். இதனால் அம்மா - மகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாம்.