சங்கமித்ராவில் கட்டப்பா?
சுந்தர்.சி இயக்கத்தில் மிகப்பிரம்மாண்டமாக உருவாக உள்ள படம் சங்கமித்ரா. தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் நடிக்கின்றனர். கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் திடீரென அப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் பாகுபலியில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்த சத்தியராஜை சங்கமித்ராவில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது.
படத்தின் ஆரம்பகட்ட வேலைகளின் இறுதியில் இருப்பதால், விரைவில் நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சத்தியராஜ், விஜய்யின் மெர்சல் படத்திலும், வெங்கட்பிரபு இயக்கும் பார்ட்டி படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.