வாடி போடின்னெல்லாம் பேசாதீங்க.. மூக்கு உடைபட்ட கவிஞர் சினேகன்!
சென்னை:
ஏய், போ, வாடின்னெல்லாம் பேசாதீர் என கவிஞர் சினேகனின் மூக்கை உடைத்துள்ளார் ரைசா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனுபவஸ்தாலி போல காட்டப்படுபவர் கவிஞர் சினேகன். பல நேரங்களில் அவரின் சுயரூபமும் வெளிப்பட்டுவிடுகிறது. அவ்வப்போது ஆறுதல் சொல்கிறேன் பேர்வழி, மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறேன் என பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்களைக் கட்டிப்பிடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
சினேகனின் ஏக வசனம்..
இது ரசிகர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியது. அதோடு சக போட்டியாளர்களையும் கொஞ்சம் கூட மேடை நாகரிகம் இன்றி ஏய் போ, வா, போடி , வாடி அவள், இவள் என ஏக வசனத்தில் பேசி வருகிறார்.
மூக்கை உடைக்கும் ரைசா
இந்நிலையில் இன்று ஒளிபரப்பாகும் புரமோவில் சினேகனின் மூக்கை உடைக்கிறார் ரைசா. இதுவரை வெறும் ஜால்ரா மட்டுமே போட்டுவந்த ரைசா இன்று சினேகனிடம் என்னை ஏய், போடி வாடி எனக் கூப்பிடாதீர்கள் என கூறுகிறார்.
சுண்டிப்போன சினேகன் முகம்
இதனால் சினேகனின் முகம் சுருங்குகிறது. ஆனாலும் அதனை மறைத்துக் கொண்டு செல்லமாகத்தான் கூப்பிட்டேன் என்றார். அதற்கும் பிடிகொடுக்காத ரைசா, எனக்கு அப்படி கூப்பிட்டால் பிடிக்காது இனி அப்படி கூப்பிடாதீர்கள் என முகத்தில் அடித்தது கூறிவிடுகிறார்.