கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சியான் விக்ரம்?
இருமுகனை தொடர்ந்து 3 படங்களில் நடித்து வருகிறார் சியான் விக்ரம். இந்நிலையில் 4-வது படமாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது விஜய்சந்தர் இயக்கத்தில் ஸ்கெட்ச், கவுதம் மேனன் இயக்கத்தில் துருவநட்சத்திரம் இந்த இரண்டு படங்களும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் ஹரி இயக்க உள்ள சாமி 2 படத்திற்கான வேலைகளும் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு மாற்றான், அனேகன், கவண் என மூன்று படங்களை கொடுத்துள்ளார் கே.வி.ஆனந்த். இந்நிலையில் தனது 4-வது படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளார். விக்ரமும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளார் என்று தெரிகிறது. ஆனால் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.