இந்தியா, சீனா, பாகிஸ்தானில் எச்ஐவி தொற்று அதிகரிப்பு
இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகளில் எச்ஐவி தொற்று அதிகரித்து வருகிறது என்று ஐ.நா. சபை கவலை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஐ.நா. வெளி யிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் எச்ஐவி தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியா, சீனா, இந்தோனேசியா, பாகிஸ்தான், வியட்நாம், மியான்மர், பாபுவா நியூ கினி, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மலேசியா ஆகிய 10 நாடுகளில் எச்ஐவி தொற்று அதிகமாக உள்ளது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் புதிதாக எச்ஐவி தொற்று ஏற்பட்டவர்களில் 95 சதவீதம் பேர் இந்த 10 நாடுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
பாலியல் தொழிலாளர்கள், தன்பாலின உறவாளர்கள், போதை ஊசி பயன்படுத்துவோர் மூலம் எச்ஐவி வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 2010 புள்ளி விவரத்தின்படி ஆசிய-பசிபிக் பிராந் தியத்தில் எச்ஐவி வைரஸால் பாதிக் கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.1 லட்சமாக இருந்தது. கடந்த 2016-ல் இந்த எண்ணிக்கை 2.7 லட்சமாக குறைந்துள்ளது.
எச்ஐவி பாதிப்பு குறித்து இந்தியா வின் 26 நகரங்களில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் 41 சதவீத எச்ஐவி நோயாளிகள், தங்களின் நோயின் தீவிரம் எந்த அளவில் உள்ளது என்பதை அறிந்து வைத்துள்ளனர். இந்திய எச்ஐவி நோயாளிகளில் 83 சதவீதம் பேருக்கு முறையாக மருத்துவ சிகிச்சை கிடைக்கிறது. 52 சதவீதம் பேர் உயர் சிகிச்சை பெறுகின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.