லண்டனில் குழந்தை பெற்றெடுத்த ஆண்...........




லண்டன்:

இங்கிலாந்தின் குளுசெஸ்ட்டர்ஷைர் பகுதியை சேர்ந்தவர்  ஹெய்டன் கிராஸ்.  பெண்ணாக இருந்த இவர் ஆணாக மாறுவதற்கு விரும்பி  அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டார். இதற்கான பிறப்புறுப்பு அறுவை சிகிச்சைக்கு அரசே நிதியுதவி செய்தது. சிகிச்சை முடிந்து, கடந்த 3  ஆண்டுகளாக ஹடென் சட்டப்படி ஆணாக வாழ்ந்து வருகிறார். ஆனால், தனது கருப்பையை மட்டும் அவர் அகற்றாமல் இருந்து வந்தார்.  இந்நிலையில், எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளும் வகையில் தனது கருமுட்டைகளை அதற்கான பாதுகாப்பு வங்கிகளில் சேமித்து வைக்க  வேண்டும் என்று ெஹடென் கோரிக்கை விடுத்தார். ஆனால், அதற்கு அதிக செலவாகும் என கூறி அரசு மறுத்தது.

இதனால், முழுமையாக ஆணாக மாறும் சிகிச்சையை நிறுத்திய அவர், பெண்ணாக இருந்து குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டார். இதற்காக தனக்கு  விந்து தானம் செய்யும்படி பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளம் மூலமாக வேண்டுகோள் விடுத்தார்.  அதையேற்று அவருக்கு ஒருவர் விந்து தானம்  வழங்கினார். இதன் மூலம், கடந்த ஆண்டு கர்ப்பமடைந்த  ஹெய்டன், கடந்த மாதம் 16ம் தேதி அறுவை சிகிச்சை மூலமாக அழகான பெண்  குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தைக்கு ஒரு வயதான பிறகு மீண்டும் வேலைக்கு செல்ல முடிவு செய்துள்ள அவர், பிரசவம் முடிந்து விட்டதால்  மீண்டும் முழு ஆணாக மாறுவதற்கான சிகிச்சையை மேற்ெகாள்ள திட்டமிட்டுள்ளார். இங்கிலாந்தில் குழந்தை பெற்ற முதல் ஆண் என்ற   பெருமையை ஹெய்டன் பெற்றுள்ளார். முன்னதாக கடந்த 2008ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த தாமஸ் பீட்டி என்ற ஆண் குழந்தை  பெற்றுக்கொண்டார். 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]