ரூ.4,699-க்கு கிடைக்கும் புதிய ரிலையன்ஸ் லைஃப் சி459 4ஜி வோல்ட் ஸ்மார்ட்போன்!
தற்சமயம் 8ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் ரிலையன்ஸ் லைஃப் லைஃப் சி459 4ஜி வோல்ட் ஸ்மார்ட்போன் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சாதனம் கருப்பு மற்றும் நீலம் ஆகிய இரண்டு நிறங்களில் வருகிறது, மேலும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லைஃப் சி459 ஸ்மார்ட்போன் விலைப் பொறுத்தவரை ரூ.4,694ஆக உள்ளது. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆண்ட்ராய்டு 6.0.1 நௌகட்:
லைஃப் சி459 பொதுவாக குவாட்-கோர குவால்காம்; 1.3ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 210 செயலி கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 6.0.1 நௌகட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது
. 4.5-இன்ச் டிஸ்பிளே:
லைஃப் சி459 பொறுத்தவரை 4.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் அசஹி கண்ணாடி பாதுகாப்புடன் டிஸ்பிளே வருகிறது அதன்பின் (480-854)பிக்சல் இவற்றில் இடம்பெற்றுள்ளது.
1ஜிபி ரேம்:
இக்கருவி 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரியர் கேமரா:
இக்கருவியின் பின்புற ரியர் கேமரா 5மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது, அதன்பின் முன்புற கேமரா 2மெகாபிக்சல் தீர்மானம் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
இணைப்பு ஆதரவுகள்:
வைஃபை 802.1, யுஎஸ்பி, ப்ளூடூத் 4.0, என்எப்சி, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.
பேட்டரி:
லைஃப் சி459 ஸ்மார்ட்போனில் 2000எம்ஏஎச் பாஸ்ட் சாரஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.