4 சக்கரவாகனம், குளிர்சாதனப்பெட்டி, 3 அறைக்கு மேல் வீடு இருந்தால் ரேஷன் பொருட்கள் இல்லை
சென்னை:
பொது விநியோகத்திட்ட பயனாளிகளை அடையாளம் காண உணவு பாதுகாப்பு சட்ட வீதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விசாயிகளுக்கு, 4 சக்கரவாகனம், குளிர்சாதனப்பெட்டி, வீடுகளில் 3 அறைக்கு மேல் இருந்தால், ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மேல் இருந்தால், தொழில் வரி, வருமானவரி செலுத்துபோரை உறுப்பினராக கொண்ட குடும்பத்திற்கு, மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு, வணிக நிறுவனங்களில் பதிவு செய்து செயல்படும் குடும்பம் உள்ளிட்டோருக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நகர்புறம்-வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்திற்கு, விதவை, முதியோர் உதவித்தொகை, திருமணம்மாகாத பெண், மாற்றுாதிறனாளி குடும்பத் தலைவர்களாக கொண்ட குடும்பம் உள்ளிட்டோருக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.