ரகசிய வீடியோவுக்காக காத்திருந்த அமலாபால்
இயக்குனர் விஜய்யிடம் விவாகரத்து பெற்ற பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் அமலாபால். முன்னதாக சர்ச்சைகளை கண்டு விலகி நின்ற அமலாபால் சமீபகாலமாக அதை எதிர்கொள்வதுடன் துணிச்சலாக கருத்துக்களும் சொல்லி வருகிறார். கடந்த மாதம் மும்பை வந்திருந்த கனடா நாட்டு பாப் பாடகர் ஜஸ்டின் பைபர் இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்த அமலாபால் அந்நிகழ்ச்சியை பார்த்துவிட்டு குப்பையாக இருந்தது என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். இதனால் ஜஸ்டின் ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார்.
சில மாதங்களுக்கு முன் பின்னணி பாடகி சுசித்ரா, சுசி லீக்ஸில் இணைய தள பக்கத்தில் சில நட்சத்திரங்களின் நெருக்கமான வீடியோ ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது விரைவில் அமலாபால் வீடியோ வெளியாகும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் அது வெளியாகவில்லை. இதுபற்றி அமலாபால் கூறும்போது,’சுசி லீக்ஸில் என்னுடைய ரகசிய வீடியோ படம் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது. அது என்ன வீடியோ என்று பார்க்க காத்திருந்தேன்’ என்றார்.