பிரபாஸுடன் நடிக்க மறுத்த டோனி ஹீரோயின்
பாகுபலி 2 ஹிட்டுக்கு பிறகு பிரபாஸ் அனைத்து மொழி ஹீரோவாகியிருக்கிறார். இப்படம் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்ததில் வசூல் சாதனை படைத்ததையடுத்து அங்குள்ள ஹீரோக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அடுத்து சாஹு படத்தில் நடிக்கிறார் பிரபாஸ். சுஜித் இயக்குகிறார். ஹீரோயினாக நடிக்க பாலிவுட் நடிகைகளிடம் பேச்சு நடத்தினர். கேத்ரினா கைப், தீபிகா படுகோன் போன்றவர்களிடம் பேசியபோது நடிக்க மறுத்துவிட்டனர். டோனி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த திஷா பட்டானியிடம் ‘சாஹு’ பட தரப்பிலிருந்து பேசப்பட்டது.
தெலுங்கில் வெளிவந்த ‘லோபர்’ படம் மூலம் திஷா நடிகை யாக அறிமுகமாகியிருந்தபோதும் பிரபாஸுடன் ஜோடி சேர நிபந்தனைகள் விதித்து வரு கிறார். குறிப்பாக சம்பள விஷயத்தில் ரூ. 5 கோடி கேட்டு கறார் செய்கிறாராம். தற்போது கைவசம் எதுவும் படம் இல்லாத நிலையில் திஷா இதுபோல் முரண்டு பிடிப்பது பிரபாஸ் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
திஷாவை ரவுண்டுகட்டி விமர்சித்து வருகின்றனர். ஹீரோயின் தேடுதலுக்கு பட தரப்பு திணறிக்கொண்டிருப்பதை கண்டு அப்செட் ஆகியிருக்கும் பிரபாஸ் தனக்கு ஜோடியாக அனுஷ்காவையே ஒப்பந்தம் செய்யுங்கள் என்று சிபாரிசு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பாகுபலி ஜோடி இப்படத்தில் மீண்டும் இணைந்தால் படத்துக்கு பலம் சேர்க்கும் என பட தரப்பும் பிரபாஸ் சிபாரிசை கருத்தில் கொண்டி ருக்கிறது.