விக்ரமிற்கு வில்லனாகும் பாபி சிம்ஹா?
முதலில் வில்லனாக நடித்த பாபி சிம்ஹா பின்னர் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆனால் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் சொல்லும்படியான அளவிற்கு வெற்றிபெறவில்லை. பாபி சிம்ஹா தற்போது திருட்டு பயலே 2, வல்லவனுக்கு வல்லவன் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் வில்லனாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் சாமி 2 படத்தில் வில்லனாக நடிக்க பாபி சிம்ஹாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். ஷிபு தமீன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. விக்ரமுடன் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.