சாம்பியன்ஸ் டிராபி போட்டி: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்தது பாகிஸ்தான்
கார்டிப்:
சாம்பியன்ஸ் டிராபி பி பிரிவு போட்டியில் இலங்கை அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிரோஷன் திக்வெல்லா 73, ஏஞ்சலோ மேத்யூஸ் 39 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணியில் அபாரமாக பந்து வீசிய ஜூனைட் கான் மற்றும் ஹசன் அலி தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் இலங்கை அணியின் பந்து வீச்சை எளிதாக எதிர்கொண்டனர். ஆனால் சிறிய இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அப்படி இருந்த போதிலும் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமதின் நிதான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இறுதியில் பாகிஸ்தான் அணி 44.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சர்ஃப்ராஸ் அகமது 61, பஃகர் ஜமான் 50, அசார் அலி 34 ரன்கள் எடுத்தனர். அபாரமாக பந்து வீசிய பிரதீப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த தோல்வியின் மூலம் இலங்கை அணி வெளியேறியது. ஜூன் 14-ம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது. அதேபோல் ஜூன் 15-ம் நடைபெறும் 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா அணியை வங்கதேச அணி எதிர்கொள்கிறது.