துபாயில் நடந்த டிவி நிகழ்ச்சியில் டென்ஷனான நடிகர் ஷாருகான்
துபாயில் ஷாருக்கானிடம் விளையாடிய டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரை அவர் கீழே தள்ளி முகத்தில் ஓங்கி குத்த முயன்றார்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் துபாய் சென்றிருந்தார். அங்கு எம்பிசியின் ரமேஸ் அண்டர்கிரவுண்ட் (அரபி டிவி நிகழ்ச்சி) க்கு அழைக்கப்பட்டிருந்தார்.இது பிரபலமான ஒரு நிகழ்ச்சி. இந்த் நிகழ்ச்சியில் பிரபலமானவர்களுக்கு சங்கடனாம குறும்புதனமான நிகழ்வு நடைபெறும்.
ஷாருகான் பேட்டி கொடுக்க டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி நிஷானுடன் பாலைவனப் பகுதியில் சென்றார். டிரைவர் வழி தவறி சென்று அவர்களின் கார் புதை மணலில் சிக்கியது. கார் புதை மணலில் மூழ்கியது. ஷாருக்கான் அமைதியாக இருக்க முயன்றார். ஆனால் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி நிஷான் பயத்தில் அலறினார். அந்த நேரம் பார்த்து கொமோடோ டிராகன் அவர்களை நோக்கி வந்தது.
கொமோடோ டிராகன் ஷாருக்கான் மற்றும் நிசானை நோக்கி வந்தது. நிசான் பயத்தால் அலறினார். ஷாருக்கோ மணலை அள்ளி டிராகன் மீது வீசினார்.
டிராகன் பக்கத்தில் வந்தபோது அதற்குள் இருந்து எகிப்தை சேர்ந்த காமெடி நடிகரும், ரமீஸ் அன்டர்கிரவுண்ட் நிகழ்ச்சி தொகுப்பாளருமான ரமீஸ் வெளியே வந்தார். டிராகன் பொம்மைக்குள் இருந்தது ரமீஸ். ஆனால் அது பொம்மை போன்றே தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது திட்டமிட்டு குறும்புதனமாக எடுக்கபட்டாதாகும்.