இரு துருவங்களாக நடிக்கும் காஜல் - கேத்ரின்
பாகுபலியை தொடர்ந்து ராணா நடிக்கும் படம் நேனே ராஜா நேனே மந்திரி. இந்த படத்தை தேஜா இயக்குகிறார். ராணாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால், கேத்ரின் தெரசா நடிக்கின்றனர். இதில் ராணா இரண்டு விதமான வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர் படக்குழு வெளியிட்டனர்.
அதில் காஜல் அகர்வால் - கேத்ரின் தெரசா இருவரும் எதிரும் புதிருமாக இருப்பது போல் இடம் பெற்றுள்ளது. காஜல் ராணாவின் மனைவியாகவும், கேத்ரின் ராணி வேடத்தில் நடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.