கர்ப்ப சோதனை விளம்பரத்தில் ஜெனிலியா
சந்தோஷ் சுப்ரமணியம் நாயகி ஜெனிலியா தனது காதலர் ரிதேஷ் தேஷ்முக்கை மணந்து கொண்டதுடன் 2 குழந்தைகளுக்கு தாய் ஆகியிருக்கிறார். பொதுவாக பிரபலமாக இருக்கும் நடிகைகள் நாப்கின் மற்றும் காண்டம் போன்ற விளம்பர படங்களில் நடிப்பதில்லை. அதில் நடித்தால் தங்களது இமேஜ் பாதிக்கும் என்று எண்ணுகின்றனர். சன்னி லியோன் போன்ற கவர்ச்சி நடிகைகள் அல்லது மாடல் அழகிகள்தான் இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்கின்றனர்.
மாஜி நடிகையாகிவிட்ட ஜெனிலியா தற்போது பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் உருப்படியான விளம்பர படமொன்றில் நடித்திருக்கிறார். பெண்கள் கர்ப்பம் அடைந்திருப்பதை குறிப்பிட்ட உபகரணத்தை கொண்டு சிறுநீர் சோதனை மூலம் அவர் கர்ப்பமா? இல்லையா? என்பதை கண்டறிய முடியும் என்ற விளம்பரம் அது. மராட்டிய மொழியில் உருவாகியிருக்கும் இந்த விளம்பரத்தில் நடித்ததற்காக அவருக்கு பெண்கள் தரப்பிலிருந்து பாராட்டுகள் வந்து குவிந்து கொண்டிருக்கிறதாம்.